நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறு நூறு
ஒற்ற பதிற்றுப் பத்து ஓங்கு பரி பாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு
அகம் புறம் என இத்திறத்தே எட்டுத் தொகை.
எட்டுத் தொகை பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, பதிற்றுப் பத்து, பரி பாடல், கலித் தொகை, அக நானூறு, புற நானூறு என்பனவாம்.

