இது குஷ்பு கற்பை பத்தி
பேசி சொல்லடி பட்ட காலம்
நண்பர் ராமசாமி புதுக்கோட்டைஇலிருந்து தன் மகன் வேலுசாமி ஐ பார்க்க மெட்ராஸ் வருகிறார். கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து திருவல்லிக்கேணி மேன்சனுக்கு பல்லவன் பஸ்ஸ புடிச்சார். பஸ்ல பயங்கர கூட்டம்.ஆபீஸ் போறவன் எல்லாம் அழுக்கு பைய தோள்ல போட்டு பஸ்சுக்குள்ள பரிதவிச்சு நிக்கிர்ராணுவ. ஆணுக்கு பெண் சரி நிகர் சமம் என்பது பஸ்சுக்குள்ள பார்க்கும்போது நல்லாவே தெரிஞ்சிது. சீட் கெடைக்காத சோகத்துல ராம்ஸ் கம்பிய புடிச்சு தொங்கி நிக்கிறார். பக்கத்ல பரதேசி மாதிரி ஒருத்தன். அவன் அக்குள்ள இருந்து அடிச்சிச்சு பார் ஒரு அருமையான வாசனை. ஆக்ஸ் தோத்துச்சு. ராம்சுக்கு மயக்கம் வராத கொறை. எதிர்ல பாத்தா
ஒரு நாப்பது வயசு ஆண் நாய் கம்பியில கையும் தன் ஒடம்பு முழுக்க பக்கத்துல நிக்கிற பொண்ணு மேலயுமா நிக்கான். ராம்சுக்கு தாங்கல. பொண்ணுக பாவம் இம்புட்டு சிரமப்பட்டு வேலைக்கு போவுதுங்க. பாவம் யாரு பெத்த புல்லையொன்னு பரிதாப பட்டு என்ன தள்ளி நிக்கலாமில்ல இங்கிறாரு . அதுக்கு அந்த புள்ள உன்னக்கு எண்ணியா நோவுது இன்னு கேக்க. தலக்கு தள சுத்தி போச்சு. அதுக்குள்ள ராம்ஸ் எறங்குற எடம் வந்துருச்சு. பாவமா இரங்கி பையன தேடினா அவன் பாவம் அதுக்குள்ளே ஆபிஸ் போய்டான். என்ன செயிரதின்னு தெரியாத நம்ப ராம்ஸ் சாவிய வாங்கி ஒரு குளியல போட்டுட்டு எதுனா சினிமாக்கு போவலாம்னு கிளம்பிட்டாரு. பாத்தா பக்கத்துல ஒரு தியேட்டர்ல பழைய படம். போய் ஒக்காந்தார். தியேட்டர்ல கூட்டமே இல்ல. மூலைல ஒக்கந்தார். லைட்ட அனைசிட்டு படம் போட்டா பக்கத்துல வேற சினிமா ஓட ஆரம்பிச்சிருச்சு. பயந்து போன நம்பாளு பதறி அடிச்சு வெளியில வந்துட்டாரு. சரி சினிமா கோட்டைதான் கேவலமா இருக்குன்னு அப்பிடியே காத்து வாங்க கடல் பக்கம் போவலம்ம்னு நடந்தார். பீச் கரை ஓரம் ஒரே கூட்டம். காலேஜ் நேரத்துல பய புள்ளைங்க பீச்ல என்ன பாடம் படிக்குது. ஒரே குழப்பம் நம்பாளுக்கு. நொந்து போன ராம்ஸ் பையன பாக்கமலே பஸ் ஏற முடிவு பண்ணி பொட்டிய தூக்கிட்டு பஸ் ஸ்டாண்ட் போரப்டர். பக்கத்துல ஒரு ஆர்ப்பாட்டம். என்னென்னு எட்டி பாத்தாரு. கர்ப்ப பத்தி தப்பா பேசின குஷ்பு ஒழிகன்னு ஒரே கோசம் போங்க.
Tuesday, July 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment